TNPSC TNPSC Mental Ability

Time and Work – TNPSC APTITUDE Previous Year Question and Answer Quiz – Part 1

Dear Aspirants, who are preparing for TNPSC Group -I, Group-2, 2A, Group- IV, VAO, Taluk SI, PC, Forest Guard exam etc., can use this Topic wise (Time and Work) TNPSC Aptitude question papers from Previous year TNPSC Exam. Mental ability is one of the Important topics of most of the entrance examinations besides one of the best determining factor of our job performance across business industry. These types of questions tests the level at which we learn things, understand the instructions and solve problems.  It may encompasses our verbal concepts, vocabulary, arithmetic and spatial awareness (the ability to judge the positions and sizes of objects etc)

By providing these previous years question papers it is our aim to let you understand the standards and difficulty level of questions that are being raised in Various Entrance Examinations.

 Time and Work Questions and Answers - Part 1

Topic Name Time and Work (நேரம் & வேலை)

Pipes & Cisterns (குழாய்கள் & தொட்டிகள்)

Chain Rule (நேர்மாறல், எதிர்மாறல்)

No of Questions 15
1. A can complete a work in 12 days . B can complete a work in 20 days . A and B together work for 3 days after that A left the work . B can complete the remaining work in

ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார் . அதே வேலையை B , 20 நாட்களில் முடிப்பார் . A மற்றும் B சேர்ந்து 3 நாட்கள் வேலை செய்தபின் A சென்று விட்டார் . மீதி வேலையை B முடிக்க தேவைப்படும் நாட்கள்
2. Two pipes can fill a tank in 30 minutes and 40 minutes separately . Third pipe can empty the tank in 24 minutes . If all the pipes kept open then tank can be filled in

ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள் , 40 நிமிடங்கள் நிரப்புகிறது . மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடத்தில் காலி செய்யும் . தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விட்டால் அத்தொட்டி நிரம்ப தேவைப்படும் நேரம்
3. A and B together can complete in 12 days , B and C together can complete in 15 days , C and A together can complete in 20 days A , B and C together can complete in

A மற்றும் B இருவரும் ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பர் . B மற்றும் C அதே வேலையை 15 நாட்களில் முடிப்பர் . C மற்றும் A அதே வேலையை 20 நாட்களில் முடிப்பர் எனில்  A , B மற்றும் C மூவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க தேவைப்படும் நாட்கள் .
4. If 9 Spiders make 9 webs in 9 days , then 1 Spider will make 1 web in how many days ?

9 சிலந்திகள் 9 வலையை 9 நாட்களில் பின்னுகிறது எனில் 1 சிலந்தி 1 வலையை எத்தனை நாளில் பின்னும் ?
5. 7 men can do a work in 52 days how many days can 13 men do the same work ?

7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர் . அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பர் ?
6. A can do a piece of work in 10 days and B can do it in 15 days . How much each of them get if they finish the work and earn Rs . 1,500 ?

A ஒரு வேலையை 10 நாட்களிலும் , B அதை 15 நாட்களிலும் செய்து முடிப்பர் . இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து ரூ . 1,500 – யை ஈட்டினால் , அத்தொகையை எவ்வாறு பிரித்துக் கொள்வர் ?
7. 120 men had provisions for 200 days . After 5 days , 30 men died due to an epidemic . The remaining food will last for

120 பேர் , 200 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வைத்துள்ளனர் . 5 நாட்களுக்குப் பிறகு 30 பேர் தொற்றுநோயால் இறந்து விடுகின்றனர் , எனில் மீதமுள்ள உணவுப் பொருள் எத்தனை நாட்களுக்கு இருக்கும்?
8. A and B together can do a piece of work in 12 days , but A alone can do it 20 days . How many days would B alone take to do the same work ?

ஒரு வேலையை A மற்றும் B ஆகிய இருவரும் சேர்ந்து 12 நாட்களில் முடிப்பர் . A மட்டும் அவ்வேலையை தனியாக 20 நாட்களில் முடிப்பர் , எனில் B மட்டும் தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர் ?
9. If 18 men can do a work in 20 days then 24 men can do the same work in

18 நபர்கள் ஒரு வேலையை 20 நாட்களில் செய்தால் 24 நபர்கள் அதே வேலையை செய்து முடிக்க ஆகும் காலம்
10. A and B can do a piece of work in 8 days but ” A ” alone can do it in 12 days . How many days . would B alone can do the same work

ஒரு வேலையை A , B இருவரும் சேர்ந்து 8 நாட்களில் முடிப்பர் . A மட்டும் 12 நாட்களில் தனியே முடிப்பார் . B மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார் ?
11. If 3 persons weave 168 shawls in 14 days , how many shawls will 8 persons weave in 5 days ?

3 பேர், 168 மேலாடைகளை 14 நாட்களில் நெய்கின்றனர். எனில் 8 பேர் , 5 நாட்களில் எத்தனை மேலாடைகளை நெய்வர் ?
12. A troop has provisions for 276 soldiers for 20 days . How many soldiers leave the troop so that the provisions may last for 46 days .

276 வீரர்கள் உள்ள ஒரு பட்டாளத்தில் 20 நாட்களுக்குத் தேவையான சமையல் பொருள்கள் உள்ளது . அந்தப் பொருள்கள் 46 நாள்களுக்கு நீடிக்க வேண்டுமெனில் எத்தனை வீரர்கள் இந்தப்பட்டாளத்தை விட்டுச் செல்ல வேண்டும் ?
13. If 12 men can build a wall 96 meters long in 6 days , what length of a similar wall can be built by 15 men in 3 days ?

12 ஆட்கள் 6 நாட்களில் 96 மீ நீளமுள்ள சுவரை கட்டி முடித்தால் 15 ஆட்கள் 3 நாட்களில் எவ்வளவு நீளச் சுவரைக் கட்டி முடிப்பர் ?
14. A alone can do a certain job in 25 days which B alone can do in 20 days . A started the work and was joined by B after 10 days . The work lasted for

ஒரு குறிப்பிட்ட வேலையை A 25 நாளுக்குள் முடிப்பார் . மேலும் B தனியாக அந்த வேலையை 20 நாட்களில் மூடிப்பார் . A வேலையை தொடங்கி 10 நாள்கள் கழித்து B சேர்கிறார் எனில் அந்த வேலை முடியும் நாட்கள் .
15. 2 men and 7 boys can do a piece of work in 14 days , 3 men and 8 boys can do the same in 11 days . 8 men and 6 boys can do 3 times the amount of this work in

2 ஆண்கள் மற்றும் 7 சிறுவர்கள் ஒரு வேலையை 14 நாட்களில் செய்து முடிக்கின்றனர் . மற்றும் 3 ஆண்கள் மற்றும் 8 சிறுவர்கள் அதே வேலையை 11 நாட்களில் செய்து முடிக்கின்றனர் . எனில் 8 ஆண்கள் மற்றும் 6 சிறுவர்கள் , அந்த வேலையைப் போல் 3 மடங்கு வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பர் ?